விஜய், மாளவிகா மோகன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்தின், ஹிந்தி டப்பிங் நேற்று யூட்யூபில் வெளியானது. வெளியான 18-மணி நேரத்தில் 2-லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.