தனியார் மருத்துவமனையில் மூதாட்டி மரணம்: நகைக்காக கொலையா?

தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை (மீனாட்சி மிஷன்) செயல்பட்டுவருகிறது. 6 தளங்களை கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இங்கு உள்ள உணவகங்களிலும் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் 6ஆவது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்திற்கு அளிக்ககப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் உடலைமீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டியை முகத்தை மூடி கொலை செய்தனரா? வேறு எதும் காரணமா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மதுரையில் பிரதான பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News