பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பிரபல ரவுடி சீர்காழி சத்யா கடந்த 2021-ல் பாஜகவில் இணைந்தார். இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடி சத்தியாவை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கி பிடித்தனர். போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்ற போது போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இதையடுத்து சத்யாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சுட்டதில் காலில் பலத்த காயம் அடைந்த ரவுடி சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.