நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு, பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.
பிரசாந்த் கிஷோர், நேற்று (ஜூன் 14) பாகல்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அந்த பொதுக்கூட்டத்தில், பிரசாந்த் கூறியதாவது “கடந்த காலங்களில் நிதிஷ் குமாருடன் பணியாற்றிய நான் ஏன் இப்போது அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவருடன் இருந்த முந்தைய காலங்களில் அவர் வேறு மனிதராக இருந்தார். அந்தக் காலங்களில் அவர் சுயமரியாதையுடன் இருந்தார்.
ஒரு மாநிலத்தின் தலைவர் என்பவர் மாநிலத்தின் மக்களின் பெருமையாகத் திகழ்பவர். ஆனால் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு, பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார்? மாநிலத்தின் நன்மைக்காக, தனது செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. 2025 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.