தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஹிஸ்புல்த் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஹிஸ்புத் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பும் வகையிலும் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு இடம் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோர் இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.