தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு மூளை சலவை செய்து ஆள் சேர்த்தது சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சென்னை மண்ணடியில் ஐந்து நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மண்ணடி பிடரியர் கோயில் தெருவில் வசித்து வந்த சிலரிடம் இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு பெங்களூர் சிறையில் இருந்து மூளை சலவை செய்தது, கேரளாவை சேர்ந்த நசீர் என்பவர் பெங்களூரு சிறையில் இருந்த பொழுது அவரது வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஐந்து நபர்களிடம் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட ஐந்து பேரிடமும் மன்னடி மோர் சாலையில் உள்ள அரேபியன் பிரஸ்ஸிங் என்ற அலுவலகம் இயங்கி வரும் நான்காவது தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.