தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பிற நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் உதவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் சில நிர்வாகிகள் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.