கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் உள்ள உக்கடத்தில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் மட்டும் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.