இயக்குனர் அட்லீ இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 7 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கொண்டாட்டத்துடன் வெளியான இப்படத்தின் வசூல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.