ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு! – கூட்டுறவுத்துறை அதிரடி!

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன. எனவே பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகள் பின்வருமாறு;

ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடும், மரியாதையோடும் நடந்து கொள்ள வேண்டும்.

ரேஷன் கடையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது மற்றும் சண்டையிடக்கூடாது.

தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுகளை ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News