லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில், அரசியல் பிரமுகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றாலும், இந்த தம்பதிகளுக்கு, தங்களது திருமணத்தில் ஒரு குறை உள்ளதாம். அதாவது, இவர்கள் தங்களது திருமணத்தை சிங்கப்பூரில் தான் முதலில் நடத்த இருந்தார்களாம். ஆனால், அவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர்.