பம்மல் நல்லதம்பி சாலையில் அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு 1008 பால் குட திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நல்லதம்பி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு பால்குட விழா அதிமுக பிரமுகரும், வழக்கறிஞருமான பம்மல் லோகநாதன் தலைமையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பால்குட விழாவில் மேள, தாளம் முழங்க முக்கிய வீதிவழியாக மயிலாட்டம் ஆடி பக்தர்கள் பால்குடம் ஏந்தி நாகவல்லி அம்மன் ஆலயத்தை வந்தடைந்து அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் மற்றும் மாவட்ட துனைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் கலந்து கொண்டு நாகவல்லி அம்மனை வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து பால்குட விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
பம்மல் நல்லதம்பி சாலையில் அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு 1008 பால் குட திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி சுவாமி தரிசனம் செய்தனர். pic.twitter.com/PqGf8ajkPb
— Raj News Tamil (@rajnewstamil) January 26, 2023