இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி உள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆனந்த் ராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் முதல் நாள் மட்டுமே ஏறக்குறைய ரூ. 1 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.