கும்மிடிப்பூண்டி அருகே 20 நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை, போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி போலீஸார் விஜய் என்பவரை திருட்டு வழக்கில் கைது செய்து, விசாரித்தனர். அப்போது, 20 நாட்களுக்கு முன்னர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், தமக்கும் வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.
அதில் ஒருவரை, சின்ன ஓபுலாபுரம் என்ற இடத்திற்கு அழைத்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து, போலீஸார் அந்த பகுதிக்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.