MTC மின்சார தாழ்தள பேருந்துகள்: டெண்டர் வெளியீடு!

மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல் – டெண்டர் அறிவிப்பை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டது.

இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதிநிலை அறிக்கையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார்..

அதனை செயல்படுத்தும் வகையில், MTCல் மின்சார தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யவும், பராமரிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டெண்டரை https://tntenders.gov.in/nicgep/app மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29.4.2024 பிற்பகலுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் MTCன் மின்சார பேருந்துகள் இந்தாண்டு மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

RELATED ARTICLES

Recent News