தென் இந்தியாவில் உள்ள பிராமன குடும்பத்தை சேர்ந்தவர் 27 வயது இளைஞர். சில வருடங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தில் இருந்து பிரிந்த இவர், கேதர்நாத்தில் அகோரியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவரது கனவில், திடீரென அர்த்தநாதீஸ்வரர் கடவுளின் தரிசனம் கிடைத்துள்ளது. இந்த கனவை கண்ட பிறகு, அதிரடி முடிவு ஒன்றை அந்த இளைஞர் எடுத்துள்ளார்.
அதாவது, கேதர்நாத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோர் பகுதிக்கு அகோரி சென்றிருக்கிறார். அங்குள்ள, தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர், கடந்த வியாழக்கிழமை அன்று, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, பெண்ணாக மாறியிருக்கிறார்.
அதாவது, அர்த்தநாதீஸ்வரர் என்ற கடவுள், எவ்வாறு பாதி பெண்ணாகவும், பாதி ஆணாகவும் இருக்கிறாரோ? அதே போல் தானும் மாற வேண்டும் என்று அந்த அகோரி முடிவு செய்திருக்கிறார்.
அதனால், இவ்வாறு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். 5 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.