சென்னை ஆற்காட்டு சாலை, இன்று அதிகாலை சாலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மெட்ரோ பணி காரணமாக ஏற்கனவே சாலை குறுகலாக இருக்கக்கூடிய நிலையில் சாலையில் திடீரென 9 அடி நீளத்திற்கு பள்ளம் விழுந்தது அப்பகுதி மக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரங்களில் ராட்சசன் இயந்திரங்கள் கொண்டு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இயந்திரத்தின் அதிர்வில் பள்ளம் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர் தற்போது அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.