மாமியார் திட்டியதால் 5 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை!

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த கொள்ளுமேடு ஒண்டித்தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (30) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சாந்தி (28) என்பவருடன் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுதிருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுவாதி என்ற 2 வயது மகள் உள்ளது. தற்போது சாந்தி 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாக மாமியார் லட்சுமி (58) மருமகளிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்ற பின் அவரது மாமியார் லட்சுமி சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் சாந்தி தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சாந்தியின் அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவி உடன் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சாந்தி உயிரிழந்தார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கை ஆர்.டி.ஓ விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். மீண்டும் முழு விசாரணைஉடற்கூறு ஆய்வு அறிக்கைவந்த பிறகு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

RELATED ARTICLES

Recent News