திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா வேடபட்டியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பத்மாவதி மற்றும் இவரது மாமியார் காளியம்மாள் ஆகியோருடன் கடந்த (28-06-2010) அன்று ராஜனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அருவாளால் மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் ஆகியோரை ராஜன் தாக்கியுள்ளார். இதில் மாமியார் காளியம்மாள் இறந்த நிலையில் மனைவி பத்மாவதியும் காயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று கடந்த 14 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பதுங்கி இருந்துள்ளார். இவர் மீது மடத்துக்குளம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கவே தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் நல்லபெருமாள் ஆகியோர் இவரை கர்நாடக மாநிலம் மங்களூரில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.