ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியில் வசித்து வருபவர்கள் ராம்குமார் அரங்கநாயகி தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கர்ப்பிணியான அரங்கநாயகி நேற்று இரவு வ. புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில பெண் குழந்தை பிறந்து இறந்தது. பின்னர் தாயின் உடல்நிலை மோசமான நிலையில் 108 அவசர ஊர்தி மூலம் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு மருத்துவரும், ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மருத்துவர் பிரசவம் பார்க்க வருவதில்லை எனவும் செவிலியர் மட்டுமே பிரசவம் பார்ப்பதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மருத்துவர் வராமல் செவிலியர் மட்டுமே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் தாய் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை அடுத்த அவரது உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவர்களை செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.