ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கருகி நாசமானது.
விஜயவாடா கே.பி.நகர் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர ஷோரூமில் முதல் தளத்தில் மின்சார வாகனங்களும், கீழ்த் தளத்தில் பெட்ரோல் வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மின்சார வாகனம் வெடித்ததில் அருகிலிருந்து வாகனங்களுக்கு மளமளவென தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமானது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.