முதல்வரிடம் மோகன் ஜி கோரிக்கை.. ஒரு சிலர் எதிர்ப்பு.. ஒரு சிலர் பாராட்டு!

திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கும் அபராத தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சிறுவர்களுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும் அபராத தொகையை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒருசிலர், அவரை கடுமையாக திட்டியும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். “சாதி வெறியை தூண்டும் படங்களை எடுப்பவர்களுக்கும் இதேபோன்று 100 மடங்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News