மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.
புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மோகன் மஜி, நாளை முதல்வராக நாளை (ஜூன் 12) பதவியேற்க உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த பார்வதி பரிதா, துணை முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.