கேரள மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இது குறித்து கேரள சட்டப் பேரவையில் பிப்ரவரி 12ம் தேதி நடந்த விவாதத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் ”கேரளத்தில் பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவது நீண்ட காலமாக உள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இதை தேர்தல் பிரசாரத்தான ஒரு உக்தியாகதான் பார்க்க வேண்டியதாக உள்ளது.
மத்திய அரசு எப்போதும் இல்லாத இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமரின் புகைப்படம் கொண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை செயல்படுத்த முடியாது என்பதை மத்திய அரசிடம் தெரிவிப்போம்.
இந்திய தேர்தல் ஆணையத்திடமும் இந்த விவகாரம் குறித்து பேச முயற்சி எடுக்கப்படும்” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.