பிரதமர் மோடியின் தாயார் காலமானார்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, சமீபத்தில் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இதையடுத்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக, மோடியின் தாயார் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, புகழ்பெற்ற நூற்றாண்டு கொண்ட வாழ்க்கை, தற்போது கடவுளின் காலடியில் தங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அரசியல் பிரபலங்கள் பலரும், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News