மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவும் நவீன உபகரண கருவிகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஐஐடியில் தொடங்கியுள்ளது.
எம்பவர் 2022 என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வு இன்றும், நாளையும் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிற .உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் பிரிவு தலைவர் சாப்பல் காசனபீஸ் இதனை தொடங்கி வைத்தார். இதில் பிரபல தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதன் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு தொடர்பான வலைதளத்தை தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி வளாக தலைவர் பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், சென்னை ஐஐடி ஆய்வு மாணவர்களின் 90 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.