தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கிய நிலையில், நவம்பர் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகள் நிரம்பியதால், விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பால்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் கீழ்வாணிக்குப்பம் பகுதியில் வீடுகளை இழந்த 13 பயனாளிகள், கால் நடைகளை இழந்த ஒரு பயனாளிக்கும் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.