தமிழக முன்னாள் முதலமைச்சர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர், மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மரு.கே.நாராயணசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.