கதையாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, நடிகர், டப்பிங் கலைஞர் என்று பன்முகத் திறமைக் கொண்டவர் மணிகண்டன்.
குட் நைட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய இவர், தற்போது தொடர்ச்சியாக பல்வேறு படங்களில், ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆக வருகிறார்.
இந்நிலையில் , இவர் நடித்துள்ள லவ்வர் திரைப்படம், வரும் 9-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த உதயநிதி , செல்போன் வாயிலாக மணிகன்டனை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மணிகன்டன் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“செல்போனில் நீங்கள் வாழ்த்துக்களை கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எங்களுடைய லவ்வர் திரைப்படத்தை விரும்பியது நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது.
என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு, உங்களது பாராட்டுக்கள், இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு புதிய சக்தியை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.