தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இளைஞர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியாக நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க உள்ளார்.