தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 1:30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.