சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவில் உள்ள வீட்டில் நபர் ஒருவர், மனைவி மற்றும் தனது மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை இவரது மனைவி படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை கண்டு அதனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அது சாதாரண பேணா அல்ல பேனா கேமரா என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக வீட்டிற்கு வந்த கணவர் அந்த பேனா கேமரா குறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வீட்டின் உரிமையாளரின் மகன் இப்ராஹிம் (36) தான் அந்த பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.
மேலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பேனா கேமரா மூலம் பல பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார், இப்ராஹிமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.