இரவு, பகலாக தொடர்ந்து, மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மேயர் பிரியா தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, மாநகராட்சி தரப்பில் கூறுகையில், ‘மழை வெள்ள பாதிப்புகளில் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து மேயர் பிரியா பணியாற்றி வந்தார். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓரிரு நாளில் பணிக்கு திரும்புவார்,” என்றனர்.
நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக இரு நாட்களுக்கு முன் ஓட்டேரி, கிருஷ்ணப்பதாஸ் சாலைக்கு சென்ற மேயர் ப்ரியாவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.