சர்வைவல் த்ரில்லர் படத்தில் மாஸ்டர் மகேந்திரன்! கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

நாட்டாமை, காதலா காதலா போன்ற பல்வேறு 90-ஸ் படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தவர் மகேந்திரன். இதையடுத்து, கதாநாயகனாக சில படங்களில் நடித்த இவர், மாஸ்டர் படத்தின் மூலம், மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், எக்கோ படத்தின் இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில், மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரித்துள்ளார்.

பல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

மேலும், “எனது நடிப்புத் திறமையை அழுத்தமாக வெளிக்காட்டும் கதைகளை தேர்வு செய்வதில், அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்த பயணத்தை தொடங்குவதற்கு, உங்களுடைய ஆதரவும், ஆசிர்வாதமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் அந்த பதிவில், அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News