ஊருக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாடிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபேஷ் குமாருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சணை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரூபேஷ் குமார், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நந்தினி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை தட்டி கேட்க வந்த வார்டு உறுப்பினர் சூரியாவையும்,ரூபேஷ் குமாரின் அண்ணன் கடுமையாக தாக்கி உள்ளார். இதுமட்டுமின்றி அங்கிருந்த இரு சக்கர வாகனம், வீட்டின் கூரைகளை அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அராஜகத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அப்போது தப்பி ஓடிய அவர்களை, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.