மண்டபத்தில் தாய் செய்த விஷயம்.. பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன்.. பாதியில் நின்ற திருமணம்..

திருமணத்திற்கு வரும் உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு திருமணம் நின்ற கதைகள் பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஆனால், மனப்பெண்ணின் தாயாராலே, திருமணம் நின்ற கதையை கேட்டிருப்போமா? அப்படியான சம்பவம் ஒன்று தான் தற்போது நடந்துள்ளது.

அதாவது, உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும், சமீபத்தில் திருமண ஏற்பாடு தொடங்கப்பட்டது. திருமண நாள் அன்று, இருவீட்டாரும், சந்தோஷத்துடன், ஆடல், பாடல் என்று கொண்டாட்டமாக இருந்தனர்.

அப்போது, பெண்ணின் தாய், சிகரெட் புகைத்துக் கொண்டே, நடனமாடியுள்ளார். இதனை பார்த்த மனமகன், கடும் அதிர்ச்சியை அடைந்தார். இதையடுத்து, திருமணத்தையே நிறுத்திவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதனால், திருமண மண்டபமே பெரும் சோகத்தில் மூழ்கியது. பின்னர், அந்த ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, சமரசம் பேசி, மீண்டும் அதே இளைஞருடன், அந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News