மலையாளத்தில், சிதம்பரம் இயக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், கடந்த மாதம் 22ம் தேதி ரிலீஸானது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே பாசிட்டிவான விமர்சனங்கள் வர, அடுத்தடுத்த நாட்களில் மாஸ் காட்டியது.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ், ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற சாதனை மஞ்சும்மல் பாய்ஸ்க்கு கிடைத்துள்ளது.