மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவுக்கு சிறை விதித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் வேண்டி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான ஜாமீன் மனுவை நீதிபதிகள் பி.ஆர் கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்நிலையில்மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து ஒன்றரை வருட சிறைக்கு பிறகு மணீஷ் சிசோடியா விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.