பணத்தை தூக்கி எறிந்த கார் ஓட்டுநர்.. அழுதுக் கொண்டே பொறுக்கிய பெண்.. வைரல் வீடியோ

சீனாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பெண் ஒருவர் கேஸ் நிரப்பும் பணியை செய்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர், தனது உயர் ரக காருக்கு, கேஸ் நிரப்பச் சொல்லி, அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

அந்த பெண் காருக்கு கேஸ் நிரப்பிய பின்னர், அதற்கான பணத்தை கேட்டார். ஆனால், அந்த பணத்தை மரியாதையாக கையில் கொடுக்காமல், தரையிலேயே வீசிவிட்டு, அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பினார்.

பின்னர், கண்ணீர் வடித்துக் கொண்டே, தரையில் சிதறிய பணத்தை, அந்த பெண் பொறுக்கினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

மேலும், பணத்தை தரையில் வீசிய அந்த கார் ஓட்டுநரை விமர்சித்தும், கேஸ் நிரப்பும் வேலை செய்து வந்த பெண்ணிற்கு ஆறுதல் அளித்தும், நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News