ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை!

எடப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்த விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் எடப்பாடியில பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட சின்னமணலி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் விசைத்தறி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் 10 வயதில் பிரணாவ் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், அங்கமுத்து கடந்த ஆறு மாதமாக ஆன்லைன் ரம்மி மற்றும் ஒரு நம்பர் லாட்டரி உள்ளிட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 5 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அங்கமுத்து கடந்த 4ம் தேதி அதிகாலையில் தற்கொலை செய்வதாக முடிவு செய்து வீட்டில் இருந்த சாணி பவுடரை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதனை அறிந்த அவரது மனைவி ராஜலஷ்மி கணவரிடம் கேட்டபோது சாணி பவுடர் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக அங்கமுத்துவை எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

RELATED ARTICLES

Recent News