பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உங்கள் மனதில் உள்ள கேள்விகளை என்னிடம் கேட்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது மனதில் உள்ள பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். இவ்வாறு இருக்க, ரசிகர் ஒருவர், விவகாரமான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
இதனை பார்த்து செம கடுப்பான மாளவிகா மோகனன், “உங்கள் மண்டைக்குள் அழுக்கு உள்ளது” என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.