மதுரையில் டபுள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் உற்சாக பயணம்!

மதுரையில் டபுள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் உற்சாகத்துடன் வலம் வந்தனர்.

மதுரையில் கடந்த ஆக.,8 முதல் 11ஆம் தேதி வரை மாமதுரை விழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மதுரையில் சுற்றுலா பாரம்பரியம், கலை, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சி தமுக்கம் மைதானத்திலும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட்காட்சி காந்தி மியூசியத்திலும், பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், இரண்டடுக்கு பேருந்து பவனி மற்றும் இறுதியாக மதுரை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர்களின் பேரணி இறுதியாக நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் இன்று மதுரை பைபாஸ் சாலையில் மாமதுரை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்தில் முன்பதிவு செய்த பொதுமக்களை அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து உற்சாகமுடன் மதுரையின் முக்கிய சாலையில் டபுள் டக்கர் பேருந்தில் உற்சாகத்துடன் வலம் வந்தனர்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த டபுள் டக்கர் பேருந்து பழங்காநத்தம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து பெத்தானியாபுரம் வரையில் 5 கிலோமீட்டர் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News