அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது மணி மண்டபத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் முழு உருவ சிலையை அமைக்க கோரிக்கை விடுத்து, சிலையும் அரசுக்கு வழங்கியிருந்தார்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்,சிலை அமைக்க தீயாய் வேலை பார்த்ததுடன்,மணிமண்டபத்தையும் சீரமைப்பு செய்தனர்.பணிமுடிந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அதனை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தனது கோரிக்கையை ஏற்று சிலையை நிறுவியதால் திருமாவளவன் மிக்க மகிழ்ச்சியில் உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கோரிக்கை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.