காதலர் தினத்தன்று தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்..!

உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரசிங்(20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீமா(19) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரத்தை அறிந்த இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சுரேந்திரசிங் விஷம் இன்று காலை 6 மணியளவில் குடித்துள்ளார். இதனை அறிந்த காதலி சீமாவும் விஷத்தைக் குடித்துள்ளார். இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார், உயிரிழந்த காதலர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதலர் தினத்தன்று காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News