கோமாளி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
டீசர் வெளியானபோதே, 2K கிட்ஸ்களின் மனதில் இடம்பிடித்த இந்த திரைப்படம், கடந்த 4-ஆம் தேதி அன் வெளியானது. தொடக்கம் முதலே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
மேலும், உலகம் முழுவதும், 27 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், பட்ஜெட்டை விட பலமடங்கு வசூலித்து, பெரும் சாதனை புரிந்துள்ளது.