வெள்ளத்தில் மூழ்கிய லாரி – அதிர வைக்கும் வீடியோ!

ஆந்திர மாநிலம் புக்கராய சமுத்திரம் அருகே உள்ள ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியில் இருந்து வெளியாகும் தண்ணீர் காட்டாறு ஒன்றின் வழியாக பாய்ந்து ஓடுகிறது.

இந்நிலையில் தரைப்பாலம் ஒன்றின் மீது வழிந்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல கலவை இயந்திரத்துடன் கூடிய ராட்சத லாரி ஒன்று முயன்றது. அப்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட லாரி கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் லாரியிலிருந்து இறங்கி நீந்தி உயிர் தப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News