டி20 உலகக் கோப்பையின் அரை இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் வர்ணனையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக் கொண்டார்.
மேலும், ஆர்.ஜே.பாலாஜி நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தனது லோகேஷ் சினிமா யுனிவர்ஸில், தல தோனியை இணைக்க விருப்பம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள், ரோலக்ஸ்-ம், தல தோனியும், ஒரே காட்சியில் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.