லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்காததால், காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ள்ளார்.
அதில், லியோ படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ” லியோவின் பட்ஜெட் 300 கோடி ரூபாய்” என்று பதிலளித்துள்ளார் லோகேஷ்.
240 கோடியில் உருவான ஜெயிலரை டிரைலரில் மட்டுமல்லாமல் பட்ஜெட்டிலும் ஓவர்டேக் செய்துள்ளது விஜயின் லியோ திரைப்படம்.