மக்களவைத் தேர்தல்: 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவைத் தேர்தலில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப் பதிவு தொடங்கியது. இதையொட்டி, அத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்டமாக தேர்தல் (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன.

நான்காம் கட்டமாக 22 தனித் தொகுதிகள் உள்பட 96 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, பிகாரில் 5, ஜார்க்கண்ட், ஒடிஸாவில் தலா 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதிக்கு இன்றும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News