பாஜகவின் நலத்திட்டங்கள், சாதனைகளை பட்டியலிட்ட திரெளபதி முா்மு..!

நாடாளுமன்ற 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நாளை இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறாா். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இன்று நடைபெற்று வரும் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் உரையில், கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பேசினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செய்த பணிகளை விளக்கினார்.

தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றிருந்தது. சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய குடியரசுத் தலைவரின் உரை 1 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

RELATED ARTICLES

Recent News